பிரித்தானியாவில் துணை இன்றி 14 குட்டிகளை போட்ட பாம்பு – குழப்பத்தில் ஆய்வாளர்கள்
பிரித்தானியாவில் ஆண் என்று எண்ணப்பட்ட பாம்பு ஒன்று 14 குட்டிகளைப் போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர்ட்ஸ்மௌத் நகரில் City of Portsmouth கல்லூரியில் வளர்க்கப்படும் பாம்பு முதலில் ஆண் என்று நம்பப்பட்டது. குட்டி போட்ட பிறகே அது பெண் என்று தெரியவந்தது.
பாம்பு எந்தத் துணையுமின்றிக் குட்டிகளை ஈன்றெடுத்ததாகக் கூறப்பட்டது. கடந்த 9 ஆண்டாகப் பாம்பு, ஆண் துணையுடன் இருந்ததில்லை என்று கல்லூரியின் வனவிலங்குப் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளனர்.
பாம்புகள் துணையின்றிக் குட்டி போடுவது மிகவும் அரிதான விடயமாகும். போவா கான்ஸ்டிரிக்டர் (boa constrictor) என்ற பாம்பு வகையில் 3 சம்பவங்கள் மட்டுமே அவ்வாறு பதிவாகியுள்ளன.
துணையின்றிக் குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவங்கள் மற்ற விலங்குகளிடையே அடிக்கடி ஏற்படுவதுண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தகைய சம்பவங்களில் விலங்குகள் தங்களைத் தாங்களே நகலெடுத்துக் குட்டிகளை உருவாக்குகின்றன.