ஜப்பானின் அதிவேக ரயிலை தாமதப்படுத்திய பாம்பு – 600 பயணிகள் அவதி

ஜப்பானின் அதிவேக ரயிலுக்குள் புகுந்த பாம்பினால் ரயில் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் 40 செண்டிமீட்டர் நீளம் கொண்ட பாம்பினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளார்.
தோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்குப் புறப்பட வேண்டிய ரயிலில் குட்டிப் பாம்பு காணப்பட்டதாக ஜப்பானின் மத்திய ரயில்வே நிறுவனம் தெரிவித்தது.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவர்கள் அந்த ரயிலில் பயணம் செய்வதற்குப் பதிலாக இன்னொரு ரயிலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரயில் தாமதமாகப் புறப்பட்டதால் 600க்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பயணிகள் எவரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
(Visited 17 times, 1 visits today)