இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பறக்கும் போது திடீரென வெளியேறிய புகை – அவசரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

லொஸ் வெகாஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானில் பறக்கும் போது திடீரென புகை வெளியேறிய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லொஸ் வெகாஸ் விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு, 153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன் விமானம் புறப்பட்டது. வானிலை பறக்கத் தொடங்கிய சிறிது நிமிடங்களிலேயே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, புகை வெளியேறியது.

இதனை உணர்ந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் லாஸ் வெகாஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.

இதனால், பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பிறகு, அவர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானத்தில் கோளாறு ஏற்பட்ட போதிலும் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த எங்கள் விமானக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பயணிகளின் திட்டமிட்ட பயணத்தை விரைந்து செயல்படுத்துவோம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விமானம் வானில் பறக்க தொடங்கும் போது புகை வெளியேறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்