தெற்கு சூடானில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் : 20 பேர் பலி!
தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





