SLvsAUS – முதல் நாள் முடிவில் 330 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியா
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.





