எச்சரிக்கை! உடல் குறைப்பு ஊசிகளை நிறுத்தினால் 4 மடங்கு வேகமாக உடல் எடை கூடும்!
உடல் எடையை வேகமாகக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஊசிகளை (Slimming Jabs – Ozempic, Wegovy) பவிப்பவர்கள் இடையில் நிறுத்தினால், சாதாரண முறையில் டயட்டில் இருப்பவர்கள் அதை நிறுத்தும் பொது கூடுவதை விட நான்கு மடங்கு வேகமாக மீண்டும் உடல் எடை கூடுவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
உடல் எடையைக் குறைக்க ஊசி போடுவதை நிறுத்தியவர்கள், ஊசி போடாமல் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைப்பவர்கள் அதை நிறுத்தும் போது கூடுவதை விட 4 மடங்கு வேகமாக மீண்டும் எடை அதிகரிக்கிறது (Weight Regain).
இந்த ஊசிகள் மூளையில் பசியைக் கட்டுப்படுத்தும் ஹோர்மோன்களை மாற்றியமைக்கின்றன. ஊசியை நிறுத்தியவுடன், மூளை வழக்கத்தை விட அதிகப்படியான பசியைத் தூண்டுவதால் மக்கள் அதிகமாகச் சாப்பிடத் தொடங்குகிறார்கள்.
ஊசி மூலம் எடை குறையும் போது கொழுப்புடன் சேர்த்து தசைகளும் (Muscle Mass) குறைகின்றன. இதனால் உடலின் மெட்டபாலிசம் (Metabolism) பாதிக்கப்பட்டு, மீண்டும் எடை கூடுவது எளிதாகிறது.
இந்த ஊசிகளை ஒரு ‘குறுக்கு வழி’யாகப் பார்க்காமல், மருத்துவரின் முறையான ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஊசியை நிறுத்தினாலும், ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியைத் தொடர்ந்து கடைபிடிப்பது மட்டுமே நிரந்தர தீர்வாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.





