வாழ்வியல்

தொப்பையை இலகுவாக குறைக்க தூங்கினால் போதும்!

மனிதர்களின் அன்றாட வாழ்வில் தூக்கம் இன்றியமையாதது.‌ நீங்கள் முறையான அளவு தூக்கத்தை தினசரி மேற்கொண்டால்தான் உங்கள் அன்றாட வேலைகள் எந்த வித தடையுமின்றி ஆரோக்கியமாக நடைபெறும். உங்களது உறுப்புகளும் எனெர்ஜியோடு நலமாக செயல்படும். ஏழு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவருக்கு முறையான தூக்கம் கிடைப்பதில்லை.

Can Glutathione Reduce Belly Fat? - Longevity.Technology

இதை குறைந்த தூக்கம் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது உங்களின் உடல் எடை குறைப்பு ப்ராசஷை பாதிக்கலாம். எனவே பின்வரும் ஆறு தூக்க வழிமுறைகளை பின்பற்றினால் உங்களின் எடையை நீங்கள் எதிர்பார்த்தபடி குறைக்கலாம். சமீபத்திய ஆய்வுகள் பல ஏழு மணி நேரத்திற்கும்‌ குறைவான தூக்கத்தை பெறும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை‌ அதிகரிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமும் உடல் எடையும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டது. இதுவே, சரியான அளவு தூக்கத்தை பெறுபவர்கள் இது போன்ற பிரச்சினைக்கு உள்ளாவதில்லை என்றும் கூறப்படுகிறது.

9 Hacks to Burn Belly Fat in Sleep | Makeupandbeauty.com

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 3இலட்சம் பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் குறைவான தூக்கம்‌ பெறும் அடல்ட்டுகளுக்கு 41 சதவிகிதம் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆய்வின் படி உங்கள் வயிற்றில் தொப்பை விழ காரணமாக குறைந்த தூக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுவே, நீங்கள் தூங்கும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும், பிஎம்ஐ குறையும் என்றும் கூறியுள்ளனர்.

ஆய்வுகளின்படி ஒவ்வொரு வயதுவரம்பிற்கு ஏற்றவாறு தூக்குமும்‌ உடல் எடை அதிகரிப்பதற்கான அபாயமும் அதிகமாவதாக கூறப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் குறைந்த தூக்கத்தால் உடை எடை அதிகரிக்கும் அபாயம் 40 சதவீதமும், குழந்தை வளரும் ஆரம்பக் கட்டத்தில் 57சதவீதமும், ஒரு நடுத்தர வயது குழந்தைக்கு 123சதவீதமும், இளமைப் பருவத்தில் 30சதவீத அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.

How To Get Rid Of Lower Belly Fat – 3 Simple Ways To Follow

இது உடல் எடை கூடுவதில் மட்டும் பங்களிக்காமல், அதீத பசி மற்றும் வயிறு நிரம்பிய உணர்வு ஆகியவை உண்டாகவும் காரணமாகிறது. மேலும் மன அழுத்தம், இன்சோம்னியா போன்று தூக்க நோய்களுக்கும் உள்ளாக்குகிறது‌. குறைவான தூக்கம் உள்ளவர்கள் அதீத பசி மற்றும் அதிகமான கலோரிகளை உட்கொள்ளும் நிலைக்கு ஆளாவதக கூறப்படுகிறது.

எடைக் குறைப்பின் முதல் விதியே கலோரிகளை எரிப்பதுதான். ஆனால், நீங்கள் குறைந்த தூக்கத்தை பெறுவதால் அது உங்களுக்கு அதீத பசியை ஏற்படுத்தி அதிகமான கலோரிகளை உட்கொள்ள காரணமாக அமையும். மேலும் அதிக கொழுப்பு‌ சத்துள்ள உணவுகள், இனிப்பான பொருட்கள், சாக்லேட் போன்றவற்றை உண்ண உங்களைத் தூண்டும். ஆய்வு முடிவுகளின்படி, குறைவான தூக்கம் உங்களை ஒரு நாளில் சாதாரண கலோரி அளவை விட 385 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள செய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

The Most Dangerous Fat Is the Easiest to Lose | Weight Loss | MyFitnessPal

நிறைந்த தூக்கத்தை பெறும் நபர் அன்றாடம்‌ ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. ஆய்வு முடிவுகளில், குறைந்த தூக்கம் உங்கள் மூளையின் செயல்பாடுகளை பாதித்து அதை குழப்பி தன்னுடைய ரொட்டீனுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்கிறது. இதன் விளைவு அதிக கலோரிகள் , சர்க்கரை, கொழுப்பு உள்ள உணவுகளையே தேர்வு செய்ய‌வைக்கிறது. இது உங்களின் எடைக் கூடுதலில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், சரியான தூக்கத்தை பெறுபவர்கள் நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நம்மில் பலரும் நள்ளிரவில் வீட்டு சமயலறையை உருட்டிக் கொண்டிருப்போம். காரணம் நள்ளிரவுகளில் பசி ஏற்படும். பொதுவாக இரவு உணவை முடித்து விட்டு நீண்ட நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் பிரச்சினை இது. எனவே சரியான நேரத்தில் தூங்கி விட வேண்டும். நள்ளிரவில் சாப்பிடுவதால் அதிக பருமன் , அதிக பிஎம்ஐ உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகிறது. அது மட்டுமின்றி அஜீரணக் கோளாறு, தூக்கமின்மை பிரச்சினைகள் ஆகியவற்றையும் மிக மோசமாக்குகிறது. அதே போல் இரவு நேரங்களில் ஹெவி ஃபுட்ஸை தவிர்த்து விட்டு லைட் ஃபுட்ஸாக எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

18 best tips to get a flat stomach

தூக்கமின்மை உங்களது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறதா என்ற கோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ரெஸ்ட்டிங் மெட்டபாலிக் ரேட் குறைவான தூக்கம் உள்ளவர்களுக்கு குறைவதாகவும், நிறைவான தூக்கமுள்ளவர்களுக்கு சரியான அளவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், குறைந்த தூக்கமுள்ளவர்கள் ஒரு‌ சில நாட்களில் சரியான தூக்கத்தை பெற ஆரம்பித்து விட்டால் அது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஊர்ஜிதமாக குறைந்த தூக்கம் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாக கண்டறியப்படவில்லை.

தூக்கமும் உங்கள் எனர்ஜியும் இரட்டைப் பிறவிகள். சரியான தூக்கமில்லை என்றால் அடுத்த நாள் நீங்கள் இயங்குவதற்கான எனர்ஜியும் இருக்காது. இரவு நேர தூக்கமின்மை பகல் நேரத்தில் உங்களை உற்சாகம் குன்றியும், சோர்வாகவும் வைத்திருக்கும். ஆனால், நீங்கள் முறையான உடற்பயிற்சிகள் செய்தால் அது உங்களின் தூக்கத்தையும் சரிப்படுத்தும். அதன் மூலம் முறையான தூக்கம் பெறலாம். அது உங்களை எனர்ஜியோடு வைத்திருக்கும்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான