கட்டார் ஹெலிகொப்டர் விபத்தில் அறுவர் உயிரிழப்பு -பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
கட்டாரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டர் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இன்று இந்த அதிகாலை விபத்துக்குள்ளாகியதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் முயற்சிகளின் விளைவாக, ஏழு பேரில் அறுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என
அமைச்சகம் X தளத்தில் தெரிவித்துள்ளது.
பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உயிரிழந்தவர்களில் இரண்டு துருக்கிய பொதுமக்களும் ஒரு துருக்கிய இராணுவ வீரரும் அடங்குவதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
சமீப வாரங்களில் கட்டார் ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் முக்கிய எரிவாயு நிலையம் கடந்த வாரம் ஈரானால் தாக்கப்பட்டது.
இருப்பினும், இந்த ஹெலிகாப்டர் சம்பவம் ஈரான் போருடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.





