100 கோடியை கடந்த மதராஸி – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெரிய புரமோஷன் இல்லாததால் முன்பதிவுகளும் எதிர்பார்த்த அளவில் நடைபெறவில்லை. இருந்தும், படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும், கதையும் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாள்களில் கவனம் பெற்றது.
முக்கியமாக, நடிகர் வித்யூத் ஜமாலின் காட்சிகள் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பும் ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், மதராஸி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.