பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சிவகார்த்திகேயன் – அவரே வெளியிட்ட அறிவிப்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் உயர்த்தி உள்ளது.
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதில் அவரின் எஸ்.கே.23 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளது.
இதுதவிர சிவகார்த்திகேயனின் எஸ்.கே.24 மற்றும் எஸ்.கே.25 ஆகிய இரண்டு திரைப்படங்களை சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்கி வருகின்றனர். இதில் எஸ்.கே.25 பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் தான் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி பாலிவுட் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக கூறிய சிவகார்த்திகேயன், அமீர்கான் தன்னை அழைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் உங்களை அறிமுகப்படுத்துவேன் என சொன்னதாகவும், அதற்கு ஓகே சொல்லி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறி இருக்கிறார்.
சில காரணங்களால் தற்போது இந்தி படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால் விரைவில் இந்தியில் நிச்சயம் படம் பண்ணுவேன். அப்படத்தை அமீர்கான் தான் தயாரிப்பார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.