இலங்கையில் கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதரிகள்! பெற்றோர் படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்றுடன் அவர்கள் பயணித்த கார் மோதியதில் சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை நுபே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரண்டு சிறுமிகளின் பெற்றோர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தியரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினர், கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில், அவர்களின் கார் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)