பொழுதுபோக்கு

21 வருட திரைப்பயணத்தில் ஜெயம் ரவியை இப்படி பார்த்தது இல்லை…

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிரத்தியேக விருந்தாக, சைரன் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வெறும் போஸ்டராக இல்லாமல் ஆச்சர்யம் தரும் ஒரு சிறு வீடியோவாக இந்த ஃப்ரீபேஸ் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃப்ரீபேஸ் லுக்கில், 21 வருட திரைப்பயணத்தில் நடிகர் ஜெயம் ரவி இதுவரை திரையில் தோன்றியிராத தோற்றத்தில், சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டலாக காட்சியளிக்கிறார்.

இக்கதாப்பத்திரத்திற்காக தன் உடலை மாற்றி 1 1/2 வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அனுபவம், அமைதியும் கலந்த தோற்றத்தில், பார்க்கும்போதே பயம் தரும் கோபமான முகத்துடன், அசத்தலாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கு நேரெதிராக இளமையும் துள்ளலுமான இன்னொரு பாத்திரத்திலும் அவர் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். தற்போது வெளியாகியிருக்கும் “சைரன்” பட ஃப்ரீபேஸ் லுக் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக அமைந்துள்ளது.

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்