எரிபொருட்களின் விற்பனை விலையை அறிவித்தது சினோபெக் நிறுவனம்!
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நேற்று (31.08) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் தனது வர்த்த செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள சினோபெக் நிறுவனம் தனது விலையை அறிவித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் லீற்றர் ஒன்றின் விலை 358 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றருக்கு 414 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஆட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசலின் விலை 338 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 231 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.
பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனம் ஆகஸ்ட் 31 அன்று சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரத்துடன் தனது வணிக நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாக இங்கு தொடங்கியது.
(Visited 6 times, 1 visits today)