விளையாட்டு

கொல்கத்தா அணியால் பந்தயத்தில் $250,000 வென்ற பாடகர் டிரேக்

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது 3வது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

இந்த வெற்றி கொல்கத்தா அணியின் பத்து ஆண்டு கால எதிர்பார்ப்பபை பூர்த்தி செய்தது. கொல்கத்தா அணியின் வெற்றி கனடிய பாடகர்- ராப்பர் டிரேக்கிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிராமி விருது பெற்ற ராப்பர் டிரேக், ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு ஆதரவாக 250,000 அமெரிக்க டாலர்கள் பந்தயம்  வென்றுள்ளார்.

கிரிக்கெட் பந்தயத்தில் டிரேக்கின் முதல் முயற்சி இதுவாகும். இதற்கு முன்பு கூடைப்பந்து, அமெரிக்க கால்பந்து மற்றும் ரக்பியில் பந்தயம் கட்டியிருக்கிறார்.

முன்னதாக, 37 வயதான கலைஞர் தனது பந்தய சீட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். டிரேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “எனது முதல் கிரிக்கெட் பந்தயத்தை கொல்கத்தா மீது வைக்கிறேன்” என்று படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

போட்டியில் கொல்கத்தா வென்றதால், டிரேக்கும் தனது பந்தயத்தை வென்று கோடியில் வென்றுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content