சிங்கப்பூர் 4,300 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் – விமானத் துறையின் முக்கிய நடவடிக்கை
சிங்கப்பூர் 4,300 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விமானத் துறையிலேயே இந்த வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது.
அடுத்த 2024 ஆம் ஆண்டு அந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்து போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் அது முழுமையாக மீட்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
OneAviation Careers வேலைவாய்ப்பு கண்காட்சி, சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. அதில் 1,700 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் சீ, விமானத் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தெரிவித்தார்.
சுமார் 40 நிறுவனங்கள் அதாவது, ஏர்பஸ், சாங்கி விமான நிலையக் குழு, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஜெட்ஸ்டார், லோட்டே டிராவல் ரீடெய்ல், ரோல்ஸ் ராய்ஸ் சிங்கப்பூர் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவங்கள் 1,700 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்துகின்றன.