சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை உயர்வு!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை, கடந்த 14 ஆண்டுகளில் முதன்முறையாக முக்கியமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக சந்தைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்காவின் வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாறுபாடுகள் மற்றும் தங்கத்திற்கு மாற்றாக முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக ஆர்வம் காட்டுவது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இதன் விளைவாக, தற்போது ஒரு அவுன்ஸ் வெள்ளி 0.3% அதிகரித்து 39.40 டொலர்கள் ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது, 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறகு வெள்ளி சந்தையில் பதிவாகும் மிக உயர்ந்த விலையாகும்.
மேலும், நிபுணர்கள் தெரிவிக்கையில், இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ளி விலை ஒரு அவுன்ஸிற்கு 42 டொலர்களை எட்டும் வாய்ப்பு உள்ளதாக அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
(Visited 5 times, 1 visits today)