1993ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உச்சத்தைத் தொட்ட வெள்ளியின் விலை
1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) வெள்ளி 50 டொலர் விலையைத் தொட்டுள்ளது.
இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.
பொருளாதார மற்றும் அரசியல் நிலவரங்களால் பங்குச் சந்தை மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்படும் உலோகங்கள் மீது வர்த்தகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக அதன் விலை சடுதியான உயர்வை சந்தித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படும் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவு உச்சம் தொட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் நெருக்கடிகள், பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.





