பொழுதுபோக்கு

தந்தையுடன் தொடர்பு… மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து அதிர்ச்சி செய்தி

நடிகை சில்க் ஸ்மிதாவின் அழகு, மற்றும் போதை ஏற்றும் கண்களை பார்த்து பல ரசிகர்கள் சொக்கி கிடந்தனர். அதே போல் பெண்களே பார்த்து ரசிக்கும் விதத்தில் இருக்கும். சில்க்கின் கிளாமரை ஆண்கள் மட்டும் அல்ல, பல ரசிகைகளும், நடிகைகளும் கூட ரசித்துள்ளனர்.

இதை சுலக்ச்சனா, அனுராதா போன்ற நடிகைகள் வெளிப்படையாகவே கூறி உள்ளனர்.

சினிமாவில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய பணியை துவங்கி, பின்னர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதித்து, சில வருடங்களிலேயே பெரிய ஸ்டார் இமேஜை பெற்றவர் சில்க்.

பல ஸ்டார் ஹீரோக்கள் இவரின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடந்த காலங்களும் உண்டு. சில்க் ஸ்மிதா பெரும்பாலும் ஐட்டம் டான்ஸ், மற்றும் கிளாமர் ரோல்களில் தான் நடித்தார்.

சில்க் ஸ்மிதா ஐட்டம் டான்சராக இருந்த போது, ஸ்டார் கதாநாயகிகளை மிஞ்சும் விதத்தில் சம்பளம் வாங்கியவர். காரணம், சில்க் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் என்கிற தகவலை கேள்வி பட்டாலே அந்த படத்துக்கு கூட்டம் களைகட்டும். இதுவே பெரிய நடிகர்களை இவருக்காக காத்திருக்க வைத்தது.

மிகவும் ஏழ்மையில் இருந்து, சினிமாவில் உச்சாணி கொம்பில் அமர்ந்த சில்க் ஸ்மிதா, தன்னுடைய இளகிய மனசு காரணமாகவே பல ஏமாற்றங்களை சந்தித்தார். ஆண்களை நம்பி ஏமார்ந்து துரோகத்தின் வலியை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன்னுடைய சேலையிலேயே உயிர் விட்டார்.

இவரின் மரணத்திற்கு பணக்கஷ்டம், தயாரித்த படத்தின் தோல்வி என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும் காதலின் வலியும், துரோகமும் தான் உண்மையான காரணம் என கூறப்படுகிறது.

இங்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்து அவர் தற்கொலைக்கு செல்ல காரணம் அவரது நண்பர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. இதை அவர் தனது தற்கொலை கடிதத்திலும் சில்க் ஸ்மிதா குறிப்பிட்டிருந்தார்.

ஆர்.எம்.பி மருத்துவரான ராதாகிருஷ்ணன், சில்க் ஸ்மிதா தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்துக் கொண்டார். சில்க் ஸ்மிதாவுக்கு ராதாகிருஷ்ணன் பல விதத்தில் உதவியாக இருந்தார். இதுவே அவர்கள் இடையே தொடர்பு ஏற்படவும் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சில்க் சுமிதாவுக்கு, ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும் எனவே ராதாகிருஷ்ணாவின் மகனை திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு , தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ள சில்க் விரும்பியதாக கூறப்படுகிறது.

ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு இந்த விஷயம் தெரிந்த பிறகு அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட துரோகம் தான் கடைசியில் சில்க்கை தற்கொலை வரை கொண்டு சென்றது என்று ஜெயசீலா சுமன் டிவி பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயம் கேட்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்