பிரித்தானியாவில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சீக்கிய பெண்
பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுளளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்த பெண்ணிடம் “உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் பிரீத் கவுர், சமீப காலமாக “இனவெறி” அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. இது ஒரு தீவிர வன்முறைச் செயல் என குறிப்பிட்டுள்ளார்.





