இந்திய தூதகரத்தை மூட வலியுறுத்தி கனடாவில் சீக்கிய அமைப்புகள் பேரணி

இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது கட்சிக்குள்ளேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை அங்குள்ள சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளன.
மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் வான்கோவெர் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் வான்கோவெரைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் நேற்று பேரணியாகச் சென்று வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வான்கோவெர் மற்றும் டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன
(Visited 13 times, 1 visits today)