குஜராத் டைட்டன் அணியின் தலைவராகும் ஷுப்மன் கில்
குஜராத் டைட்டன் அணியின் புதிய தலைவராக ஷுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதற்குக் காரணம்.
அதற்காக அவருக்கு 15 கோடி இந்திய ரூபாய் வழங்கப்படும் என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாண்டியா 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
அதன் பிறகு, அவர் குஜராத் டைட்டன் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப்பை வென்றுகொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)





