மனிதர்களை போலவே போதையில் மிதக்கும் சுறாமீன்கள் : ஆய்வாளர்கள் கூறிய தகவல்கள்!
புளோரிடாவை ஒட்டிய கடல் பகுதியில் பெருமளவிலான கொகோயின் போதைப் பொருட்கள் நீரில் கொட்டப்படுகின்றன. இதனை உண்ணும் கடல் உயிரிணங்கள் போதையில் மிதப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆவணப்படத்திற்காக போதைப்பொருள்கள் கடலில் கொட்டப்பட்டதா என்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நீரில் கொட்டப்படும் கோகோயின் மருந்தை உட்கொண்ட சுறாக்கள் பைத்தியக்காரத்தனமான வழிகளில் செயற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள். புளோரிடாவைச் சுற்றியுள்ள கடல்களில் எண்ணற்ற டன் கண்க்கான கொகோயின் போதைப்பொருளை விட்டுச் சென்றுள்ளதாகவும் இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைவிடப்படுகின்ற போதை பொருட்கள் கடலுடன் கலக்கின்றன எனவும், அவை சுறா மீன்களின் ஆகாரமாக மாறிபோவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் சுறாமீன்கள் விரைவில் அழிவதற்கு வழிவகுக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.