அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – வெகுண்டெழுந்த மக்கள்!
அமெரிக்காவின் மினியோபோலிஸில் குடியேற்ற அதிகாரி ஒருவர் சோதனை நடவடிக்கையின்போது காரில் இருந்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு மினசோட்டா (Minnesota) நகரில் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் போது அந்தப் பெண் சட்டப் பார்வையாளராகச் செயல்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், மாநில அளவில் முழுமையான மற்றும் நியாயமான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.





