அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு உடை அணிந்த ஒருவர் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் எந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், துப்பாக்கிச் சூடு குறித்து தனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய புலனாய்வுப் பிரிவு தற்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார்.





