களுத்துறையில் பதிவாகியுள்ள துப்பாக்கிச்சூடு சம்பவம்

களுத்துறை தெற்கு, பலாதோட்ட பகுதியில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் (Service Centre) ஒன்றின் மீது இன்று (11) மாலை 6 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்திற்காக 9mm ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்தின் உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து களுத்துறை பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரும் களுத்துறை தெற்கு காவல்துறையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.