அமெரிக்காவின் அன்னபோலிஸ் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி!

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்திலுள்ள, அன்னபோலிஸ் பிராந்தியத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னபோலிஸ் காவல்துறைத் தலைவர் எட் ஜாக்சன் கூறுகையில் மாநிலத்தின் தலைநகரான பேடிங்டன் பிளேஸ் பகுதியின் 1000வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் இது தொடர்பாக ஒரு நபர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
குறைந்தபட்சம் ஒருவர் இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் குறைந்தது மூன்று பேர் இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து தற்பொழுது எதுவும் தெரியவில்லை என்றும் பலத்த காயமடைந்த ஒருவர் தலைக்காய சிகிச்சை மையத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.