உலகம்

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு!! மூவர் ஆபத்தான நிலையில்!

டெக்சாஸின் ஆஸ்டினில் (Austin) உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் பொழுதுபோக்கு  இடமான  புஃபோர்டில் (Buford) இன்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த 14 பேரில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காலை 1:39 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகவும், தகவல் கிடைத்து சுமார் 57 வினாடிகளுக்குள் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கியுடன் மக்களை அச்சுறுத்திய ஆண் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!