தங்காலே பகுதியில் துப்பாக்கிச்சூடு – தம்பதியினர் உயிரிழப்பு!
தங்காலே பகுதியில் இன்று (18) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தங்காலே , உனகுருவ பகுதியில் உள்ள கபுஹேன சந்தி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் முறையே 68 , 59 வயதுடையவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)




