தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 09 பேர் மரணம்!
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) அருகே உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெக்கர்ஸ்டாலில் இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத 12 துப்பாக்கிதாரிகள், இன்று இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தருவதற்கு முன் தாக்குதல்தாரிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
தப்பி செல்லும்போது தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தாக்குதல்தாரிகளை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





