வட கரோலினாவில் துப்பாக்கிச்சூடு – நால்வர் படுகாயம்! உதவி கோரும் காவல்துறை!!
வட கரோலினாவின் (North Carolina) கான்கார் (Concord) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கான்கார்டில் கிறிஸ்துமஸ் மர விளக்கு ஏற்றும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்தாரிகள் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 704-920-5027 என்ற எண்ணிற்கு தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Visited 3 times, 4 visits today)




