ஐரோப்பா செய்தி

கிரீஸில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!

கிரீஸில் கடந்த வெள்ளிக்கிழமை (31.10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் மையப்பகுதியில் உள்ள வோரிசியா (Vorizia) தெருவில் இந்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.  தாக்குதல்தாரிகள் AK-47 தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது 39 வயது ஆணும் 56 வயதுடைய பெண்ணும் கொல்லப்பட்டதாக தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!