அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 05 பேர் படுகாயம்!! தாக்குதல்தாரிகள் தப்பியோட்டம்!!
அமெரிக்காவின் வடமேற்கு, டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பெருநகர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வால்டர் வொஷிங்டன் (Walter Washington ) கன்வென்ஷன் சென்டரிலிருந்து சுமார் இரண்டு தொகுதிகள் தொலைவில் நேற்று இந்த துப்பாக்கிக்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்தாரிகள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





