ஆப்பிரிக்காவில் பணத்துக்காக நடந்த துப்பாக்கிச்சூடு – 07 பேர் பலி!
தெற்கு ஆப்பிரிக்காவின் மாரிக்கானாவில் (Marikana) இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயன்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்தாரிகளை காவல்துறையினர் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 50 வயதுடைய ஆறு ஆண்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





