ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு!
ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீது இன்று துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் வடமேற்கு புறநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறையின் முக்கிய இயக்குநரகத்தில் அலெக்ஸீவ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தின் சாலிஸ்பரியில் 2018 ஆம் ஆண்டு நடந்த நரம்பு மண்டல தாக்குதலுக்குப் பின்னால் GRU இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர் ஐரோப்பிய ஒன்றியத் தடைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பி ஓடிவிட்டதாகவும், புலனாய்வாளர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியவர் மீது குற்றவியல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





