மெக்சிகோவின் கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி!
மத்திய மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கால்பந்து போட்டியின் நிறைவில் சம்பவ இடத்திற்கு வந்த துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நகரித்தில் அதிகரித்து வரும் குற்றவியல் சம்பவங்களை அடிகோடிட்டு காட்டுவதாகவும், வன்முறையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமிடம் (Claudia Sheinbaum) நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.





