பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி
பிரித்தானியாவின் பல்கலைக்கழகங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்களது குடும்பத்தினரை பிரித்தானியாவிற்கு அழைத்து வர பிரதமர் ரிஷி சுனக் தடை விதிக்க முடிவு செய்துள்ளார்.
பிரித்தானியாவிலுள்ள பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வர தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 2024 முதல் பிஎச்டி நிலைக்கு கீழே உள்ள பல்கலைக் கழகங்களில் படிப்பவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களோ, பிரித்தானியாவிற்கு அழைத்து வர தடை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பற்றி, தகவுகளை அரசாங்கம் வெளியிட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது குறித்து பேசிய பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர், இந்த மாற்றங்கள் மூலம், இனி இடம்பெயர்வு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் 16000 ஆக இருந்த குடும்ப உறுப்பினர் விசாக்களின் எண்ணிக்கை, இந்த 2022ல் 136,000 ஆக கிட்டதட்ட எட்டு மடங்கு அதிகரித்துள்ளதென, அமைச்சரவையில் பிரதமர் கூறியுள்ளார்.மேலும் மாணவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான பராமரிப்பு தேவைகள், மறு ஆய்வு செய்யப்படும் என கேபினெட் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்களின் மூலம் சர்வதேச மாணவர்கள் தங்களது படிப்பு முடிவதற்குள் மாணவர் விசா வழியிலிருந்து, வேலை செய்வதற்கான விசாவை பெறும் முறையினை அகற்றும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.