தமிழ்நாடு

தமிழ் நாட்டில் அதிர்ச்சி சம்பவம் – 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட 4 நாய்க்குட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தாயிடமிருந்து பிரித்து ஈவு இரக்கமில்லாமல் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் வீசப்பட்ட நான்கு நாய்க்குட்டிகளை தீயணைப்புத் துறை வீரர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கிராமத்தினரிடம் ஒப்படைத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கணபதிபுரத்தில் உள்ள ஒரு கிணற்றில் நாய்க்குட்டிகளின் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்தப் பகுதியினர் கிணற்றில் பார்த்தபோது நான்கு நாய்க்குட்டிகள் கிணற்றுக்குள் விழுந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனை எடுத்து இது குறித்த அந்த பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கந்தர்வக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் 40 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லா கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நான்கு நாய் குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டு அப்பகுதியினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தாயிடமிருந்து நான்கு நாய் குட்டிகளையும் பிரித்து யாரோ சிலர் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் ஈவு இரக்கமில்லாமல் வீசி உள்ளது தெரியவந்ததை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபோன்ற செய்யக்கூடாது என்று அறிவுறுத்திய தீயணைப்புத் துறையினர் அங்கிருந்து சென்றனர்.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!