தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்.. தண்ணீர் வாளிக்குள் விழுந்து 11 மாத குழந்தை பலி!

சென்னை அருகே உள்ள தாம்பரம், சேலையூர் மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் – உமாபதி தம்பதி. இவர்களுக்கு 11 மாதத்தில் அர்ச்சனா என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு பெற்றோர் இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அருகில் படுத்திருந்த குழந்தையை காணாத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வீடு முழுவதும் தேடியுள்ளனர்.

அப்போது வீட்டில் உள்ள பக்கெட் ஒன்றில் குழந்தை அர்ச்சனா மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது தண்ணீரில் விழுந்ததில் மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த சேலையூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இரவு பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, குழந்தை தானாகவே திறந்திருந்த கதவு வழியாக வெளியே சென்றது தெரியவந்தது. வீட்டுக்குள் இருந்த தண்ணீர் பக்கெட்டை இழுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக, பக்கெட்டிற்குள் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

(Visited 24 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்