ஜெர்மனியில் ஆசிரியர்களின் அதிர்ச்சி செயல் அம்பலம்
ஜெர்மனியில் ஆசிரியர்கள் பரீட்சையில் தோன்றிய மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனியின் மெட்டுள்பேர்க்வோக் மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற இவிச்சடர் ஷோ ஜிம்நாசியம் என்று சொல்லப்படுகின்ற உயர் தர பாடசாலையில் அண்மையில் உயர்தர பரீட்சை நடைபெற்றது.
இதன் பொழுது இரண்டு ஆசிரியர்கள் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு பணத்துக்காக சில பரீட்சைகளில் உதவி செய்தார்கள் என்று தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக ஒரு மாணவியானவர் தமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வீட்டுக்கு சென்று உரையாடியதாகவும் இதன் பின்னர் குறித்த ஆசிரியர் குறித்த மாணவிக்கு வாய் மூலமான பரீட்சைக்கு கூடுதலான புள்ளிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இவ்வாறு அந்த நடவடிக்கைகளில் ஈடுப்படார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற இரண்டு ஆசிரியர்கள் பாடசாலையில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பாடசாலை தரப்பு தெரிவித்துள்ளது.