இலங்கையில் அதிர்ச்சி – கணவன் சந்தேகப்படுவதால் சிசுவுக்கு தாய் செய்த கொடூரம்

வத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்கடுவ, சின்னமோல பிரதேசத்தில் வெசாக் போயா தினமான வௌ்ளிக்கிழமை சிசுவை புத்தர் சிலைக்கு கீழே விட்டுச் சென்ற தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட நான்கு நாள்களான சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதான இவர், மாத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று தெரியவருகின்றது.
திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாயான இப்பெண் மீது, அவரது கணவன் சந்தேகப்படுவதால், சிசுவை இவ்வாறு விட்டுச் சென்றதாக வாக்குமூலமளித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையில் சிசு வைக்கப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 9 times, 1 visits today)