இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – திருடச்சென்ற இளைஞனை அடித்துக் கொன்ற பிரதேச மக்கள்

சூரியவெவ – வெவேகம பகுதியில் திருடச் சென்ற இளைஞரொருவரை பிரதேச மக்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று அதிகாலை மேலும் இருவருடன் காணியொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த நீர்ப் பம்பியை திருடிச் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சூரியவெவ பொலிஸ் அதிகாரிகள் வந்த போது சந்தேகநபரின் உடல்நிலை மோசமடைந்திருந்ததை அடுத்து அவர் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!