பிரான்ஸில் அதிர்ச்சி – மீண்டும் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
பிரான்ஸில் பகுதி எரிந்த நிலையில் ஒரு ஆணின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோர்ஸ் தீவின் பஸ்தியா நகரில் நேற்று முன்தினம் மாலை இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத.
இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து, இந்த உடலம் ஜோந்தார்மினரால் மீட்கப்பட்டுள்ளது என, கோர்சின் சட்டவியல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இன்னமும் சாவிற்கான காரணமோ, குற்றச் செயலிற்கான தகவல்களோ பெறப்படவில்லை.
உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் விசாணைகளின் பின்னரே மேலதிகத் தகவல்களை வழங்க முடியும் எனவும், ஜோந்தார்மினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.





