ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மரங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
ஆஸ்திரேலியாவின் பல மில்லியன் மரங்களை ஒரு மர்ம நோய் உலுக்கிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மரங்களுக்கு Chlorotic Decline Syndrome எனப்படும் ஒருவகை நோய் பாதித்துள்ளது.
இந்த நோய் ஏற்படும்போது மரங்களில் இலைகளின் நிறம் மஞ்சளாக மாறி இலைகள் மரங்களிலிருந்து உதிர்ந்துவிடுகின்றன. இந்த நோய் முதன்முதலில் 2003ஆம் ஆண்டில் தோன்றியது.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு மரங்களுக்குப் பாய்ச்சுப்படும் தண்ணீர்த் தரத்தின் மாற்றமே அந்த நோய்க்குக் காரணம் என ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.
1990ஆம் ஆண்டுகள் முதல் தண்ணீரால் இரும்புக்கறை படிவதைத் தடுக்க ஆழ்துளை நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. அதனால் மண்ணின் அமிலத்தன்மை மரங்களுக்கு ஏற்றதாக இல்லை.
தேவையான ஊட்டச்சத்தையும் மரங்கள் பெறமுடியாமல் போனது. மரங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது பெரும் சவாலாய் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.
இதற்குத் தீர்வாக மண்ணின் அமிலத்தன்மையைச் சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.