வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – 6 இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை – அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் திகதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் 30 ஆம் திகதியன்று நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டியில், ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒரே சுற்றுவட்டாரத்தில் 6 பெண்கள் அடுத்தடுத்து மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொலைகள் அனைத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!