சீனாவில் பாம்பாக மாறிய பெண்ணால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி
சீனாவில் பாரம்பரிய மருந்தினை பயன்படுத்தி பெண் ஒருவர் பாம்பு போன்று மாறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான டிங்டிங் (Tingting) என்ற பெண்ணே இவ்வாறு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் பயன்படுத்திய மருந்தினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக அவரது உடல் ஊதா-சிவப்பு நிறத்தில், பாம்பின் தோல் வடிவத்திலான வடுக்களாக மாறியுள்ளது.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பத்து வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண்ணின் காலில் ஒருவகை அடையாளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தோல் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில், அது படிப்படியாக அவரது உடல் முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிங்டிங் சீனப் பாரம்பரிய மருந்தைப் பயன்படுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக அவரது உடலில் ஊதா-சிவப்பு நிறத்தில், பாம்பின் தோல் வடிவத்தைப் போன்ற வடுக்கள் உருவாகியுள்ளன.
குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சீன மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், மருத்துவர்களின் அனுமதி பெறாமல் அந்தப் பெண்ணே மருந்தைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தக் கூடாது என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





