ஜெர்மனியில் இராணுவ தளபதியின் அதிர்ச்சி செயல்
ஜெர்மனியின் முக்கிய ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் மாஸ்கோஸ் ஸ்டுவஸ்டன் அவர்களின் பதவி பறிப்பட்டுள்ளது.
இந்த ராணுவ தளபதியின் பதவி பறிப்பை ஜெர்மனியுடைய ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது. அதாவது டுசில்டோ நகரத்தில் ஒரு விழா நடைபெற்றுள்ள நிலையில் பல ராணுவத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிடப்பட்ட ராணுவ தளபதியானவர் விழாவில் பங்குப்பற்றிய சிலரிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இதனடிப்படையில் இவருக்கு எதிராக ஒழுக்காடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த ஒழுக்காட்டு நடவடிக்கையின் படி இவரின் பதவி பறிக்கப்பட்டு ஓய்வு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது