பிரான்ஸில் பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

பிரான்ஸில் பிறக்கும் பெண் குழந்தைகள் கருப்பை இல்லாமல் பிறக்கிறார்கள் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
4000 பெண் குழந்தைகளில் ஒருவர் இவ்வாறு பிறப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு கருப்பை இல்லாமல் பிறந்து இன்று 30 வயதாகும் Océane என்னும் மகளுக்கு Gaétane எனும் 57வயதான தாயார் தனது கருப்பையை தானம் செய்ய முன்வந்தார்.
இந்த மாற்று அறுவை சிகிச்சை பிரபல மருத்துவ மனையில் நடைபெற்றுள்ளது. Océane பிறக்கும் போதே “Rokitansky syndrome” எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கருப்பை இல்லாமல் பிறந்தார்.
இதனால் தான் கருவுற முடியாது எனும் மனோநிலையில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை அவரின் கவலைகளை மாற்றியமைத்தது.
(Visited 6 times, 1 visits today)