நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவின் முதல் பதிவு
																																		பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, டாக்காவை விட்டு வெளியேறிய பின்னர் முதல் கருத்துரையில், நாட்டில் கலவரக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
பங்களாதேஷின் ஸ்தாபக தந்தையான தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அவர் நீதி கோரியுள்ளார்.
ஷேக் ஹசீனா தனது மகனின் Xல் வெளியிட்ட மூன்று பக்க உணர்ச்சிகரமான அறிக்கையில், “ஆகஸ்ட் 15, 1975 அன்று தனது தந்தை படுகொலை செய்யப்பட்டபோது இழந்த குடும்ப உறுப்பினர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார்.”
“அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இன்றைய காலகட்டத்திற்கு திரும்பிய அவர், போராட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் நாசம் ஆடியதால், மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறை, பத்திரிக்கையாளர்கள், சமூக சேவகர்கள், பொது மக்கள் என பல உயிர்கள் பலியாகியுள்ளன.”
“என்னைப் போன்ற தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த படுகொலையில், இந்த அழிவில் ஈடுபட்டவர்களுக்காக, விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களைப் பிடித்து, தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்,” என்ற பதிவிடப்பட்டுள்ளது.
        



                        
                            
