உலகம்

10 ஆண்டுகள் சிறை செல்லும் ஷேக் ஹசீனா!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அரசு வீட்டுவசதித் திட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும்  இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில் அவர் குற்றவாளியாக கண்டறியப்பட்டதை அடுத்து மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரபியுல் ஆலம்,  ஒவ்வொரு வழக்கிலும் 05 ஆண்டு சிறை தண்டனை என்பதற்கு அமைய இரண்டு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

புர்பச்சோலில் (Purbachol) உள்ள ராஜுக் நியூ டவுன் (Rajuk New Town ) திட்டத்தின் கீழ் நில ஒதுக்கீட்டில் ஊழல் இடம்பெற்றதாக பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக் (Radwan Mujib Siddiq) மற்றும் அவரது மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக் (Tulip Rizwana Siddiq) மற்றும் அஸ்மினா சித்திக் ( Azmina Siddiq)  ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஹசீனாவிற்கு -10 ஆண்டுகளும், துலிப் சித்திகிற்கு – 04 ஆண்டுகளும், ரத்வான் முஜிப் சித்திக் மற்றும் அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு 07 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா 1 லட்சம் டாக்கா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,  பணத்தை  செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!