பிரேசிலில் போதையில் மிதக்கும் சுறா மீன்கள்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி
பிரேசில் – ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் உள்ள 13 சுறா மீன்களை பரிசோதனை செய்ததில், போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர்.
ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது.
அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் கழிவுகள் மூலமாகவோ கொக்கைன் கடலுக்குள் நுழைவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
இது போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொட்டப்பட்ட அல்லது தொலைந்த கொக்கைன் பேக்கேஜுகளை சுறாக்கள் உட்கொண்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பெண் சுறாக்களும் கர்ப்பமாக இருந்தன என்றும், ஆனால் அவற்றின் பிறக்காத குழந்தைகளில் கொக்கைன் பாதிப்பு தெரியவில்லை.
மேலும், கொக்கைன் சுறாக்களின் நடத்தையை பாதிக்கிறதா என்பதைப் பார்க்க கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று கூறியுள்ளது.